கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோல் கான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், இணை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் 2016 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட வைப்புத் தொகையினை உடன் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு வழங்க தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பழுதுகள் ஏதேனும் இருப்பின் உரிய முறையில் பழுது பார்த்து தயார் நிலையில் வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து தீர்வு காண மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்டத்தில் எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மேல் நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மற்றும் பள்ளப்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் காவல் துறை பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையும், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....