ஈச்சனாரி பிரிவில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

கோவை, மதுக்கரை மார்க்கெட் பகுதியை அடுத்த ஈச்சனாரி பிரிவு அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை, சுந்தராபுரம் மற்றும் மதுக்கரை மார்க்கெட்டிற்கு இடையே ஈச்சனாரி பிரிவு அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்றைய தினம் அப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈச்சனாரி பிரிவு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, மதுக்கடையை அகற்றம் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தங்களிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், உடனடியாக கடையை மூட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் வராமல் இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூட பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. 

இதனிடையே மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல முறை மனு அளித்தும் நேற்றைய தினம் கடையை திறந்து மது  விற்பனை செய்து வருவதாகவும் மீண்டும் கடை திறக்கப்பட்டால் மக்களை ஒன்றிணைந்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...