ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக ஆன்லைனில் ஒரேநாளில் 3,500 மனு தாக்கல்


கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் நிதியைப் பெற்று, இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் பெரும் பொறுப்பில், கோவை மாநகராட்சி நிர்வாகம் உள்ள இந்நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி அன்று கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை நிர்வாக அதிகாரியாக, ஆர்.சுகன்யா நியமிக்கப்பட்டார்.

இத்திட்டத்தில், கோவை மாநகராட்சி இரு ஆண்டுகளுக்கு முன்பே, இத்திட்டத்துக்காக கோவை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இப்போது தான், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கான தலைமை செயல் அலுவலர் (சி.இ.ஓ.,) நியமனம் நடந்துள்ளது. அந்த நியமனமும், கோவை மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

சி.இ.ஓ அதிகாரியாக ஆர்.சுகன்யாவின் சர்ச்சைக்குரிய நியமனம் தொடர்பாக, சமூக ஆர்வலர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஐ.டி பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஸ்ரீநிதி 'Change.org' என்ற சமூக மாற்றத்திற்கான ஒரு ஆன்லைன் பொது நலன் மனுவைத் தொடங்கியுள்ளார்.

இதில், 28 வயதான அசோக் ஸ்ரீனித்தி ஆன்லைனில் மனுவின் மூலம் "கோயம்புத்தூர் தலைமை நிர்வாக அதிகாரி" என்ற தலைப்பில் ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக ஆன்லைனில் ஒரேநாளில் 3,500 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அதில், அரசியல் தலையீடு எதுவுமே இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெளிவாக அறிவுறுத்தியுள்ள நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., பிரமுகருமான கே.பி.ராஜூவின் மகளான ஆர்.சுகன்யா கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை நிர்வாக அதிகாரியாக, இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசின் விதிமுறைகளின்படி, இந்தப் பணியிடத்துக்கு 15 ஆண்டுகள் அனுபவம் கோரப்பட்டிருந்தது.

ஊதியம் 2 லட்ச ரூபாய் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இவரை நியமிக்க வேண்டுமென்பதற்காகவே, மூன்று ஆண்டு அனுபவம் என்றும், ஒரு லட்ச ரூபாய் ஊதியமென்றும் நியமன விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, அந்த திருத்தத்துக்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து அசோக் ஸ்ரீனித்தி சிம்ப்ளிசிட்டி செயலியில் தெரிவிக்கையில், ஒரு அனுபவமற்ற நபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான சூழ்நிலைகளை அறிந்துகொள்ள 25 தகவல் கேள்விகளுக்கு நான் ஆர்.டி.ஐ விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புதிதாக நியமனம் செய்யப்படுவது தொடர்பாக, எந்தவொரு அரசியல் குறுக்கீடுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்றார்.

இது குறித்து, கோவை திமுக சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திக் தொடர்பு கொண்டபோது, கோவை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை நிர்வாக அலுவலர் பொறுப்பு என்பது ஒரு திறமைமிக்க உயர்ந்த பொறுப்பாகும். இதில் தற்போது அனுபவமும், திறமையும் உள்ள ஒருவரை நியமிக்காமல், அரசியல் தலையீட்டுடன் பணி நியமனம் செய்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது நியமனம் பெரும் சர்ச்சைக்குரியது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், ஆளுங்கட்சியினரின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு, பின்னால் இருந்து ஒவ்வொரு செயலும் திட்டமிடப்பட்டு, நடைபெற்று வருகிறது. முக்கிய முடிவுகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வேண்டுகோளுக்கிணங்க நடந்து வருவதாக கூறினார்.

மேலும் நீங்களும் மனு தாக்கல் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...