அசுத்தமான இடத்தை அழகுபடுத்திய ஆட்சியர்- மக்கள் வரவேற்பு

தமிழக மக்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களையும் பெரிதும் ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று நீலகிரி மாவட்டம். மலைகளால் சூழப்பட்ட இந்த மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தில், பேருந்து நிலையம் எதிரே ரேஷ்கோர்ஸ் நுழைவு வாயில் உள்ளது. இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள பகுதி நீண்ட காலமாக அசுத்தமாக காணப்படுகிறது என அப்பகுதியினரால் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டமும், மக்கள் அதிகம் கூடும் இப்பகுதியின் அசுத்தத்தை யாரும் கண்டுகொள்ளாமல்  கடந்துவந்தனர். 

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொருப்பேற்ற இன்னசென்ட் திவ்யா, மேற்குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து உடனடியாக இதனை சீரமைக்குமாறும், அருகில் உள்ள கால்வாய்யை மூட வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அசுத்தமும், துர்நாற்றமுமாக காணப்பட்ட அந்தச் சுவர் சீரமைக்கப்பட்டு உதகையின் அழகை வெளிப்படுத்தும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. 

மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான நீலகிரி ரேஷ்கோர்ஸ் நுழைவு வாயில் அருகில் உள்ள சுவற்றை தூய்மைப்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...