கோவையில் பலே கார் திருடன் கைது : 23 கார்களை பறிமுதல் செய்தது போலீஸ்

கோவை மாநகர் பகுதியில் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் திருடுபோவதும், வீடு புகுந்து திருடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ஒரு மர்ம நபர் கத்தி முனையில் வழிப்பறி செய்ததாக வடவள்ளி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நேற்று மாலை அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த சிவா என்கிற சிவச்சந்திரன் என்ற நபர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை வடவள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கோவையின் பல்வேறு பகுதிகளில் வீடுபுகுந்து திருடுவதும், சாலையோரம் நிற்கும் கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.



தொடர்ந்து, சிவா-வை போலீசார் விசாரணை செய்ததில், 23 கார்கள் திருடியிருப்பதும், பூட்டிய வீடுகளுள் புகுந்து 21 சவரன் நகைகளை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவா-விடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார்களை போலீசார் மீட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளையனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...