கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

கேரள அரசு கட்டிவரும் தடுப்பணைகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நீராதாரங்கள் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பணை கட்டியுள்ளது.

மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு ஆற்றுநீரை எடுத்துக் கொள்வதற்கு பம்ப்ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் கேரள அரசு பாடவயல், சீரக்கடவு, சாடிவயல் சாளையூர் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கையினை துவங்கியுள்ளது.

கோவை மற்றும் கொங்கு மண்டல மக்கள் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு போராட்ட வடிவில் செய்திகள் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் இத்தகைய முறையினை தடுக்க தமிழக அரசு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் மூலமும், தமிழக அரசு இத்தகைய கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று தடையாணை பெற வேண்டும். தொடர்ந்து, பவானி ஆற்றுப்படுகையில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டிவிட்டால் கொங்கு மண்டலம் கடுமையான நீர் அற்ற மக்கள் வாழும் பகுதியாக மாறும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிவை நோக்கி சென்றுவிடும். கடுமையான வறட்சி குடிநீர் கட்டுப்பாடு விவசாயம் பாதிப்படைந்து வரும் நிலையில் இதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் கள ஆய்வு செய்து உண்மைத் தன்மையினை தமிழக அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...