பொள்ளாச்சி கிராம நிர்வாக அலுவலர் திருமனம் செய்து ஏமாற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார்

கோவை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தன்னை திருமனம் செய்து ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் இரு பெண் குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா உடையார்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பன்னீர் செல்வம். இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், 7 வயது மற்றும் இரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் மனைவி மஞ்சுளா இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னையும், இரு குழந்தைகளையும் அவருடைய குடும்பத்துடன் சேர்த்துக் கொள்வதில்லை. இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து, கடந்த இரண்டு மாதங்களாக பொள்ளாச்சி துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் மனு அளித்தும் இது வரை எவ்வித பயனுமில்லை. தன் கணவருக்கு ஆதரவாகவே அதிகாரிகள் பேசி வருகின்றனர். 

ஒருதலைபட்சமாக செயல்படும் அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு பெண் குழந்தைகள் இருப்பதை கருத்தில் கொண்டு தன் கணவரிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மஞ்சுளா ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...