கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவையில் டெங்கு வேகமாகப் பரவி வருவதையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தும், கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறது.



பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வார்டுக்கும், டெங்கு காய்ச்சல் வார்டுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். உடன், அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...