மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை

கோவையில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடை பயனம் சென்று கொண்டிருந்த கவுதாமினி (60) என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கவுதாமணி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது தொடர்பாக இருகூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்கின்ற பங்க் கார்த்தி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மனோஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவ்விருவரும் சேர்ந்தே செயின் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கோவை 7-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி, இவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....