நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் போல் பேசி பணம் பறித்த பல குரல் மன்னன் கைது

நீலகிரி மாவட்டம் உதகை ஷில்பங்க் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் மாவட்ட ஆட்சியர் குரலில் பேசி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ஒருவர் மாவட்ட ஆட்சியரின் பெயரைக் கூறிக்கொண்டு பணம் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பி1 காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தானம் (45) என்னும் நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பிரம்மநாயகம் என்பவரது மகன் சந்தானம் என்பதும், சொந்த ஊர் திருநெல்வேலி என்பதும் தெரியவந்தது. மேலும், இவரின் மீது மதுரை, திருப்பூர், நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

எந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்கிறார்களோ அங்கு சென்று பிரபலமான இடங்களில் ஆட்சியர் போல பல குரல்களில் பேசி மோசடி செய்வதில் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாக மோசடியில் ஈடுபட்டுவந்த பலகுரல் மன்னன் சநதானம் கைது செய்யப்பட்டார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....