லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

கோவையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் இருந்து மதுக்கரை நோக்கி கழிவு நீர் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. வண்டியை தியாகராஜன் (38) என்பவர் ஓட்டி வந்தார். எதிரே மணல் லாரி வந்தது. அந்த லாரியை பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் (38) என்பவர் இயக்கினார். இரண்டு லாரிகளிலும் கிளீனர்கள் உடனிருந்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர்களான தியாகராஜன், சந்திரகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலியே பலியாகினர். மேலும் இருவர், படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....