குழந்தைகள் காப்பகம் அமைப்பதற்கான பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மாநகராட்சி அதிரடி

கோவை மேற்கு மண்டலம், 18வது வார்டில், வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்துார் செல்லும் ரோட்டில், வீரகேரளம் கிராமம் பாரதி நகரில், குழந்தைகள் காப்பகத்துக்கு ஏழு சென்ட், பூங்கா அமைக்க, 40 சென்ட் என 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டு இருந்தது. பூங்கா அமைக்க வேண்டிய இடத்தில், கோவில் மற்றும் ஒரு வீடு கட்டப்பட்டு உள்ளது. பூங்கா இடம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது.



குழந்தைகள் காப்பகத்துக்கான இந்த இடத்தை வீரசிவானந்தம் என்பவர் ஆக்கிரமித்து, நான்கு ஆண்டுகளாக, மீன் மார்க்கெட் நடத்தி வந்தார். அதை அகற்றிக் கொள்ளுமாறு, மாநகராட்சியால் நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் அகற்றாததால், அந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு தற்போது அந்த ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.



அதேபோல், இதற்கு அருகிலுள்ள கண்ணப்பன் நகரிலும், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 50 சென்ட் ரிசர்வ் சைட்டும், 30 அடி ரோடும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி அமைக்கபட்டு 50 சென்ட் நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டுள்ளது. 



எனவே, நகரமைப்பு பிரிவினர் 'சர்வே' செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அப்பகுதியில் பூங்கா இடத்தை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...