காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்ற வாலிபர் பலி : சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உறவினர்கள் புகார்


திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் தாக்கியதில் தினேஷ் என்ற கட்டுமான தொழிலாளி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (20 ). இவர் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரை திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வலிப்பு ஏற்பட்டதால் தினேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிகிச்சைக்காக தினேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் தினேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து தினேஷ்-ன் உறவினர் முத்து என்பவர் கூறுகையில், 'காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் கழுத்து எலும்பு உடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ் உயிரிழந்துள்ளார். பின்னர் தான் அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தினேஷ்-ன் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் காட்ட மறுக்கின்றனர்.

மேலும், தினேஷை தனியார் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துவந்த தந்தை நாகராஜை உறவினர்களிடம் போலீசார் காட்ட மறுக்கின்றனர். 



எனவே, தினேஷ் மரணத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...