கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஹனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி நாளினைத் தொடர்ந்து மூன்றாம் நாள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை, போத்தனூர் சாரதா மில் சாலை- சுந்தராபுரம்- பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் குறிச்சி குளத்தில் கரைக்கப்படவுள்ளன.

குனியமுத்தூர் தர்மராஜா கோவில்- பாலக்காடு சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குனியமுத்தூர் நீர்நிலையில் கரைக்கப்படவுள்ளன.

இதனால், மேற்குறிப்பிட்ட சாலை வழியாக இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக செல்லும் வாகனங்களும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...