'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்'- ஈஷாவில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பேரணி

'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்பது நமது நாட்டில் ஓடும் ஆறுகளை மீட்டெடுத்து புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். நதிகளை மீட்கும் விழிப்புணர்வை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதற்காக, ஈஷா நிறுவனர் சத்குரு கோவையிலிருந்து கன்னியாகுமரி வழியாக ஹரித்வார் வரை 16 மாநிலங்களுக்கு, 32 நகரங்களுக்கு தாமே வாகனம் ஓட்டிசெல்ல உள்ளார்.

செப்டம்பர் 3-ம் தேதியன்று தொடங்கும் இந்த பேரணி, அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் நிறைவடையும். அக்டோபர் 2-ம் தேதி அரசாங்கத்திடம் நதிகளை மீட்கும் கொள்கை பரிந்துரை முன்வைக்கப்படும். இந்த கொள்கை பரிந்துரை, நமது நதிகளின் இரு புறத்திலும் வனப்பகுதிக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளியல் திட்டத்தை உள்ளடக்கியது.

இந்த பயணத்தின் போது சத்குரு, 16 மாநிலங்களின் முதலமைச்சர்களையும் சந்தித்து நதிகளை மீட்பதற்கான அவரது பரிந்துரைகளை ஒப்படைக்கவுள்ளார். 

இந்த முயற்சிக்கு விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து துறைகளிலிருந்தும் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு நதிகளை மீட்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள் 27 ஆகஸ்ட் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4:30 மணிமுதல் 5:30 மணிவரை 112 அடி ஆதியோகி சிலையிலிருந்து ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயிலான சர்ப்ப வாசல் வரை மனித சங்கிலி அமைத்தனர்.



இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் நம் நதிகளின் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள், கைவினை பொருட்கள் மற்றும் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். மேலும் 80009 80009 என்ற எண் வடிவத்தில் நின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...