பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து பதவி விலகிய கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் முதன்மை செயல் அலுவலர்

கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரி மாநில அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்பட்டு ஆர்.சுகன்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த 4ம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதன்மை செயல் அலுவலர் ஆர்.சுகன்யா, மேலாண்மை இயக்குநருக்கு முகவரியிட்ட கடிதத்தில், "தான் மேற்படி பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் மேற்கொண்டு இப்பணியில் தொடர விரும்பவில்லை எனவும் தனது பணி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறும்" தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல் அலுவலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனருமான க.விஜயகார்த்திகேயன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...