கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பணியிட மாற்றம்


கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணிபுரிபவர் துரை. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோவைக்கு இடமாறுதலாகி வந்தார். இந்த நிலையில், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையர் பதவி யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில், காலியாக இருந்த கோவை மாநகர தலைமையிட துணை ஆணையர் பதவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பணியிடமாற்ற ஆணையை தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி வழங்கியுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...