சேலம் தெற்கு ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சாதனை

ரயில்பயணிகள் ரயில்பயணத்தின் போது தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வதை தடுக்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 

கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 விடுமுறை நாட்கள் வருவதால் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதை உத்தேசித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் தலைமையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் 41 ரயில்களில், 46 வணிகவியல் பிரிவு ஊழியர்கள், 11 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கொண்ட ஒரு குழு, 26.08,2017 நள்ளிரவு 12 மணி முதல் 27.08,2017 நள்ளிரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இதில் 4,69,342 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக 1089 பேர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதுவே சேலம் கோட்டத்தில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச தொகையாகும். இதற்கு முன்னதாக 02.04.2017 அன்று நடத்தப்பட்ட இது போன்ற ஒரு சோதனையின் போது 3,37,595 ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. இந்த சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பி. செல்வகுமார், பி. ராமச்சந்திரன், ஜே.மோகன்ராஜ் மற்றும் இதர வணிகவியல் பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இது போன்ற பயணச்சீட்டு சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு பயணச்சீட்டின்றி பயணிப்பதை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...