குழந்தைக்கு இந்து முறைப்படி பெயர் வைக்காத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவர் கைது

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவரும் எட்வினா வானமதேவி (24) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரியா என்ற பெயரை எட்வினா சூட்டியுள்ளார். ஆனால், இந்து முறைப்படியே பெயர் சூட்ட வேண்டும் என்று அவரது கணவர் கோரியுள்ளார். இதனால் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், முரளி எட்வினாவின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் கூறியதோடு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மனைவி இறந்துவிட்டதாகவும் நாடகம் நடத்தியுள்ளார்.

தொடர்ந்து, முரளியிடம் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முரளி முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, போலீசார் துருவி துருவி விசாரித்ததில், இந்து முறைப்படி குழந்தைக்கு பெயர் சூட்ட மனைவி மறுத்ததால் இருவருக்கும் இடையே நேற்று இரவு சண்டை வந்ததாகவும், அப்போது கழுத்தை பிடித்ததில் மனைவி இறந்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போத்தனூர் போலீசார் முரளியை கைது செய்துள்ளனர். 

குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக தாயை கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...