வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டுயானையை பிடிக்கும் முயற்சியின் போது யானை பலி


வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வேலுச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வால்பாறை வனச்சரக ஊழியர்கள் டாப்சிலிப்பில் இருந்து வரவழைக்கப்பட்ட கலீம் என்ற கும்கி யானையை வைத்து ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...