'நதிகளை மீட்போம்' தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் செப்.,1ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் துவக்கம்

"நதிகளை மீட்போம் இயக்கம்" செப்.,1ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரத்தில் அமைதியாக 4 மணி நேரம் நின்று விழிப்புணர்வு முயற்சி. அழிந்து வரும் நம் தேசத்து நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்ய 'நதிகளை மீட்போம்' என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகிவருகிறது.

பலநூற்றாண்டுகளாய் வற்றாத ஜீவநதிகளாக ஓடி நம் மண்ணையும், நம் வாழ்வையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்தி வந்த நம் நதிகள் கடந்த சில வருடங்களில் கவலைக்குரிய விதத்தில் வற்றி வருகின்றன. நம் நதிகளை மீட்கும் முக்கிய தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

நதிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வை உருவாக்கு வதற்காக செப்.,1ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நாடெங்கும் லட்சக்க்கணக்கான மக்கள், தங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் நீலநிற உடை அணிந்தும், 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற அட்டைகளை ஏந்தியும் நிற்க உள்ளனர்.



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர்கள் சாலை ஓரங்களில் 50 அடி இடைவெளி விட்டுஅமைதியாக நிற்கப் போகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கார்பொரேட் நிறுவன பணியாளர்கள், திரை உலக பிரமுகர்கள் உள்ளிட்ட அணைத்து தரப்பினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.



இது ஒரு போராட்டமோ ஆர்பாட்டமோ அல்ல, நதிகளை மீட்கும் முயற்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். பொதுமக்களிடையே, வற்றிவரும்  நதிகளின் நீரோட்டத்தை அதிகரிக்க வேண்டிய விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காக நாடெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவிருக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது.

  • செப் 1ம் தேதி நீலநிற உடையணிந்தோ, நதிகளை மீட்போம் என்ற அட்டை ஏந்தியோ உங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் காலை 8 மணிமுதல் 11 மணிவரை நிற்கவேண்டும். ('நதிகளைமீட்போம்பாரதம்காப்போம்' என்றபடத்தை rallyforrivers.org என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).
  • கூட்டமாக நிற்காமல் ஒவ்வொருவரும் குறைந்தது 50 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். 
  • உங்கள் ஊரில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  • கிழக்கு தமிழகம் 8300021000, வட தமிழகம் 8300016000 ,மேற்கு தமிழகம் 8300057000, தென் தமிழகம் 9600297449, 8637498133 சென்னை 8300011000.


இந்திய தொழில்துறை குழுமம் (CII), இந்திய துணைராணுவம்(CRPF), எல்லை பாதுகாப்பு படையினர்(BSF), இந்திய ரயில்வே, உட்பட பல அமைப்புகள் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றனர். கட்சி பேதமில்லாமல், மத பேதமில்லாமல் பல தலைவர்களும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

முன்னூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ஆகியோர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 80009-80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...