வேளாண்மைப் பல்கலையில் தானிய பாதுகாப்பு குறித்த பணியரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் பாதுகாத்து வைக்கப்படும் தானியங்களின் பாதுகாப்பு குறித்த பணியரங்கம் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.இராமசாமி, தானியங்களை விஞ்ஞான ரீதியாக பாதுகாப்பதன் மூலம் சீரான உணவு விநியோகம் மற்றும் வேளாண் பொருட்களுக்கான சீரான விலையினை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.



இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக இணை இயக்குனர் ஜெனரல் அழகுசுந்தரம் சிறப்புரையாற்றுகையில், தானிய பாதுகாப்பில் தனது கனடா, டெல்லி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நாட்டில் உள்ள உணவுப் பாதுகாப்பு கிடங்குகளில் பூச்சியியல் வல்லுனர்களை நியமிப்பதன் மூலம், அவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கோடி மதிப்பிலான தானியங்களை முறையாகப் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.



பூச்சிக்கட்டுப்பாட்டு கூட்டமைப்பின் தலைவர் விஸ்வநாதன், சுமார் 30 சதவிகித தானியங்கள் சேமிப்பு கிடங்குகளில் பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாவதை எடுத்துரைத்தார். அவற்றைக் கட்டுப்படுத்த மித்தைல் ப்ரோமைடு மற்றும் பாஸ்ஜீன் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருவதையும் தெரிவித்தார்.

முன்னதா, இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாற்றிய பன்னாட்டு பல்லுயிர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் பேசும்போது, பொது விநியோகத் திட்டத்தில் தரமான தானியங்களை விநியோகிப்பதில் விஞ்ஞான ரீதியான தானியப் பாதுகாப்பு முறைகள் தெரிதும் உதவும் என்று தெரிவித்தார். மேலும் பருவகால மாற்றங்களால் தொடர் வறட்சி ஏற்படும் சூழ்நிலையிலும் முறையான தானியப் பாதுகாப்பு முறைகள் உணவுப் பற்றாக்குறையின்றி தவிர்க்க உதவும் என்று தெரிவித்தார். 



இந்நிகழ்வில் பல்கலைக்கழக வெளியீட்டுத்துறை தனி அலுவலர் மோகன் நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விஞ்ஞானிகளும், விவசாயிகளும் மாணவர்களும், பூச்சி மருந்து நிறுவனங்களும் பங்கேற்றனர். மேலும் கண்காட்சி மற்றும் தானிய சேமிப்பு பொறி குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...