சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கட்டுரை, குறும்பட போட்டி- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய அளவிலான கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய அளவிலான கட்டுரை மற்றும் குறும்பட போட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் செப்டம்பர் 5 அன்று 10.30 மணி முதல் 1 மணி வரை கீழ்காணும் தலைப்புகளில் நடைபெறுகிறது.

“தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பில் (250 வார்த்தைகளுக்கு மிகாமல்) கட்டுரை போட்டியும், “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு” பற்றிய (2 அல்லது 3 நிமிடங்கள்) குறும்படம் போட்டியும் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

ஊராட்சி அளவில் போட்டிகளை நடத்தி அவற்றில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 1 அல்லது 2 வீதம்) ஊராட்சி அளவிலான குழு தேர்வு செய்யும்.

அவற்றில் வட்டார அளவில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 3 வீதம்) வட்டார அளவிலான குழு தேர்வு செய்யும். மாவட்ட அளவில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 3 வீதம்) மாவட்ட அளவிலான குழு தேர்வு செய்யும்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை மற்றும் குறும்படங்கள் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். போட்டிக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...