ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கோவை சிறையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவி வளர்மதி


ஒய்என்ஜிசி, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக சிறையில் இருக்கும் அவர் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிப்பு மற்றும் பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி சிறையிலும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி வளர்மதி விடுத்துள்ள நிபந்தனைகள்:-

நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகளை அழித்து வரும் நாசகர திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களை உடனே கைவிட வேண்டும். 

சிறையில் தன்னை பார்க்க வருபவர்களை உளவுத்துறை தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றனர். இதற்கு காரணமான உளவுத்துறை மற்றும் அவர்களுக்கு சட்ட விரோதமாக தகவல்களை அளித்து வரும் சிறைத்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். 

தன்மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எந்தவித நிபந்தனையின்றி உடனே திரும்பப் பெற வேண்டும். சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளான வாய்தாவிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதை திட்டமிட்டே நிராகரித்து வருகின்றனர். வெளியே அனுப்பும் கடிதங்களை சென்றடையாமல் தடுத்து வருகின்றனர். இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது துறைநீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...