நீட் தேர்வுக்கு எதிராகக் களம் இறங்கிய அரியலூர் மாணவி தற்கொலை


நாடு முழுவதும் தகுதி தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கான நீட் தேர்வுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்திடம் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இப்படி விலக்கு அளித்தால் நீட் தேர்வுக்காக தயாரான மாணவர்களின் நலன் கேள்விக்குறியாகிவிடும் என்று ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜரானார்.

இதனிடையே அரியலூரை சேர்ந்த அனிதா இந்த வழக்கில் தன்னை எதிர்மனுதாரராக இணைந்து கொண்டார். அரியலூர் குழுமூரை சேர்ந்தவர் சண்முகம். மூட்டைத் தூக்கும் தொழிலாளியான இவரது மகள் அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவ கட்ஆஃப்பில் 196.75 மாணவர்களுக்கு பெற்றுள்ளார்.



மாநில பாட திட்டத்தில் படித்த அனிதா, நீட் தேர்வில் 86 மதிப்பெண்களை பெற்றுள்ளார். நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் தனது மருத்துவ கனவு பாழாகிவிடும் என்று அந்த மாணவி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

இந்த சுழ்நிலையில், மாணவி அனிதா இன்று (செப்டம்பர் 1) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கு எதிராகக் களம் இறங்கிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...