கோவை மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திமுக சார்பில் முற்றுகைப் போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு, குப்பை வரி, குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வைப்புத் தொகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள், திமுக-வினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி-யைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், டி.பி.சுப்பிரமணியம், உமா மகேஸ்வரி, நந்தகுமார், வடவள்ளி சண்முகசுந்தரம், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி , கே.எம்.சுந்தரம், குறிச்சி பிரபாகரன், வெ.ந.உதயகுமார், வி.பி.செல்வராஜ், புதூர் மணி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...