தேசம் முழுவதும் விழிப்புணர்வு உருவாக்கிய நதிகளை மீட்போம் இயக்கம்

அழிந்து வரும் நம் தேசத்து நதிகள் மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய நதிகளை மீட்போம் என்னும் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் உருவாகி வருகிறது. பல நூற்றாண்டுகளாக வற்றாத ஜீவ நதிகளாக ஓடி நம் மண்ணையும், நம்வாழ்வையும் கலாச்சாரத்தையும் வளப்படுத்திய நம் நதிகள் கடந்த சில வருடங்களில் கவலைக்குரிய விதத்தில் வற்றி வருகின்றன. நம் நதிகளை மீட்கும் முக்கிய தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.



நதிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக இன்று (செப்டம்பர் 1) நாடெங்கும் லட்சக்கண்கானோர் தங்கள் ஊரின் முக்கிய வீதிகளில் நீல நிற உடை அணிந்து, நதிகளை மீட்போம் என்ற அட்டைகளை ஏந்தியும் சிலர் நதிகளை மீட்போம் என்ற தலைக்கவசம் போன்ற அட்டைகளை தலையில் அணிந்தும் நின்றனர்.



தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் சாலை ஓரங்களில் 50 அடி இடைவெளியுடன் அமைதியாக பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் நின்றனர். மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கார்பொரேட் நிறுவன பணியாளர்கள், திரை உலக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, உற்சாகமாக மழையில் நனைந்தபடி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நதிகளை மீட்க உறுதியாக நின்றனர்.



இந்நிகழ்ச்சி இனம், மதம், சமயம், சாதி கடந்து அனைத்து மக்களிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றது. பொது மக்கள் பலரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றதுடன் 80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்திய தொழில் துறை கழகம் (சிஐஐ), இந்திய துணை ராணுவம் (சிஆர்பிஎஃப்), எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எஃப்), இந்திய இரயில்வே உட்பட பல அமைப்புகளும், கட்சி பேதம், மதபேதமில்லாமல் பல தலைவர்களும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிகின்றனர். அரசாங்க அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கடந்த ஒரு மாதமாக இவ்வியக்கத்திற்க்கு ஆதரவு அளித்த வன்னம் உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...