மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் முற்றுகை போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவை தற்கொலை தூண்டிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மனம் உடைந்து  தற்போது தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவை இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக இன்று மாலை நடைபெற்றது. 



இது குறித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாநில செயலாளர் அஷ்ரப் அலி கூறுகையில்; நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் இன்னும் போராடி வரும் இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவக் கனவு கொண்டிருக்கும் வேளையில் இன்று அவர்களின் கனவை மத்திய, மாநில அரசு தகர்த்துள்ளது. இதன் மூலமாக மாணவர் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது இந்த அரசாங்கம். இதற்கு காரணமான அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். இதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு முடியப் போவதில்லை நீட் தேர்வு குழிதோண்டி புதைக்கும் வரை மாணவர்களின் புரட்சி ஓங்கும் என்றார்.



கோவையில் கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கோவை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...