தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் மாணவி அனிதா தற்கொலை - கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸார் குவிப்பு

நீட் தேர்வால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகளை அமைத்து, மாணவர்கள் யாரையும் அனுமதிக்காதவாறு, போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களிலும் போலீஸார், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதேபோல,  தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர், திராவிடக் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் கோவை ரயில் நிலையத்தில் சென்னை - மங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த போலீஸார்,  சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்து, ரயில் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். 



அப்போது, 3 கட்சியினரும் சாலையில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு அனுமதிளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  மேலும், தமிழகத்தை விட்டு ஆர்,எஸ்.எஸ் அமைப்பு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...