மேம்பாலத்தின் மீது ஏறி ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய ஒரு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், காந்திபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாத மேம்பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



அதோடு, மேலும் சில மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்காமல் இருக்க, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.



மேம்பாலத்தின் மீது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு போலீஸார் வராததால்,  அப்பகுதியில் பதற்றம் நிலவியது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...