மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் கண்டனப் பேரணி

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தின் முழுவதும்ம த்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் பொறுப்பாளர் முத்துச்சாமி மற்றும் இளைஞரணி தலைவர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. வடகோவையில் உள்ள  தி.மு.க. அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி சிவானந்தா காலனியில் முடிவடைந்தது. 



இறுதியில், சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகே மாணவி அனிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர். மாணவியின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்றும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர், 

தி.மு.க.வின் சார்பில் நடந்த இந்தப் பேரணியில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...