நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - நாம் தமிழர் கட்சி

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சீமான் தெரிவித்தார்.

இதேபோல, கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில். 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 



நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, ரயில்நிலையத்திற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...