கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை- தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்பு

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. இதில், நேற்று ஒரே நாளில் 92 மி.மீ மழை பதிவானது கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகளை மகிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டியெடுத்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று மாலை சுமார் 7 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், டவுன்ஹால், ரயில் நிலைய சாலை, லங்கா கார்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரேஸ் கோர்ஸ், காந்தி பார்க், அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியது.

நகரின் மத்தியில் உள்ள ரேஸ்கோர்ஸ், ரயில் நிலையம் அருகிலுள்ள லங்கா கார்னர், வடகோவை மேம்பாலம் மற்றும் காட்டூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உக்கடம் அருகே, பாலக்காடு சாலையில், பெரிய குளத்தின் கிழக்குக் கரையை ஒட்டிய பகுதியில் பெருவெள்ளம் சூழந்ததால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

மேலும், சில பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரக் கிளைகள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...