வரும் 6-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதை உரிய அதிகாரிகள் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து, இந்த நடைமுறை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மழை மற்றும் இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு இருக்கிறது, இயற்கை சீற்றங்களின் போது ஆவணங்கள் சேதமடைந்தால் யார் பொறுப்பேற்பது? என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதைதொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், செப்டம்பர் 5-ம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமம் கேட்டு கட்டாயப்படுத்தப்படாது என தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, நீதிபதி துரைசாமி இந்த வழக்கை தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்,4) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இயற்கை சீற்றங்களின் போது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை. எனவே, வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 5-ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மேலும், டிராபிக் ராமசாமி மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதியின் இந்த உத்தரவால், லாரி உரிமையாளர்கள். டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...