நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா- மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் மறியல்

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் இன்று வடகோவை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 



அப்போது, எஸ்டிபிஐ கட்சியினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மேலும், இந்த ரயில் முற்றுகைப் போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் முழக்கமிட்டனர்.



இதனைத்தொடர்ந்து, இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, வடகோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தடுப்புகளை மீறி எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...