கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (செப்.,5) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபானி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வழியாக பேரணி நடந்தது.



இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவதாக உறுதியளித்து ஏமாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...