டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்தரங்கு

ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 

அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கோவையில்,  ஜி.எஸ்.டி.வரி விதிப்பில்   உள்ள நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 8-ம் தேதி பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மையத்தில் நடைபெறுகிறது. இதில், ஜி.கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஜி.எஸ்.டி.வரி குறித்த சந்தேகங்கள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.

டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களின் முன்னேற்றம், வியாபாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகள் குறித்தத பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 17 நாடுகளை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில், 150 உறுப்பினர்கள் டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...