மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தனது இல்லத்தில், கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகலறிந்து வந்த போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவுரி லங்கேஷ் உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி லங்கேஷ் பிரபல கன்னட எழுத்தாளர் லங்கேஷ் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்க முன்பு பகுத்தறிவாளர் எம்.எம். கல்பர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 2008.ம் ஆண்டு  பா.ஜ.க. எம்.பி. பிரஹலாத் ஜோஷி மற்றும் பா.ஜ.க. தலைவர் உமேஷ் துஷி ஆகியோர் கவுரி லங்கேஷ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தனர். 

கவுரி லங்கேஷ்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கவுரியின் மரணத்திற்கு கேரளா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பத்திரிகையாளர் லங்கேஷ் கொல்லப்பட்டதில் நிச்சயம் சதி உள்ளது என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...