நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஈரோட்டில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தார். 

அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- பதவி ஏற்றதில் இருந்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகின்றார்.  அவர் கூறுவது அனைத்தும் தவறானது.  அ.தி.மு.க.,வில் சபாநாயகருடன் சேர்ந்து 135 எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையுடன் இருக்கின்றோம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது. 



நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனால், தீர்ப்பு தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வந்ததால், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

மேலும்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது தான் தங்கள் நிலைப்பாடு. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின் போது, அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...