நீட் பிரச்சனை: இரண்டாம் நாளாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வான நீட் தேர்வினால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று (நேற்று) தமிழகம் முழுவதும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாபெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பினை கேள்விக்குறியாக்கும் வகையிலான நீட் தேர்வு முறையினை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொருப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (புதன் கிழமை) தொடர்ந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.



இறுதியில், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலிக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...