ஊழலில் சிக்கித் தவிக்கும் குடிசைமாற்று வாரியம்- மழைநீரினால் போராடும் சி.எம்.சி காலனி மக்கள்

கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வான குடிசை பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைத்துள்ளது. குறிப்பாக, குளக்கரை போன்ற தாழ்வான பகுதிகளில் வாழும் குடிசைவாழ் மக்கள் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் தங்கள் வீடுகளில் மழைநீர் தேங்கி பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.



இதுபோன்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் மறுநாள் வீதிகளிலோ, மண்டபங்களிலோ தங்கும் நிலை நாம் அறிந்ததே. இவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கமும் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியும் வருகிறது. ஆனால், ஆளும் அரசினாலும், குறிப்பிட்ட ஒருசில அரசாங்க அதிகாரிகளின் ஊழல்களாலும் பாமரமக்களுக்கு என ஒதுக்கப்பட்ட வீடுகள் இன்னும் அவர்களுக்கு சென்றடையவில்லை.



குறிப்பாக, கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள சி.எம்.சி. காலனியில் 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் வீடு கிடைக்காத சுமார், நுாற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள சிட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நீர்வழியோரங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும், குடிசைகளில் வசிப்போருக்கும் என அம்மன்குளம், கணபதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், சி.எம்.சி., காலனி மக்களுக்கும், வெள்ளலுாரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளது. ஆனால் அது முறையாக தகுதிவாய்ந்தவர்களுக்கு சென்றடைந்ததா என்பது கேள்விக்குறியே.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''கோவையில் பெய்யும் தீடீர் கனமழையால் நாங்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் புகுந்து வீடுகளை சேதம் செய்கிறது. இதனால், நாங்கள் மண்டபங்களில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. தற்போது இங்கு வசித்து வரும் பெரும்பாலானோர் துப்புரவு தொழிலாளர்களே. காலையில் நேரமாக எங்கள் பணிகள் துவங்குவதால், வெள்ளலூர் பகுதிகளில் இருந்து எங்களால் டவுன் பகுதிக்கு வர முடியாது. எனவே, மாநகராட்சி சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல், வெள்ளலூர் பகுதி பள்ளிகளில் எங்கள் குழந்தைகளை படிக்கவைக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். 

தற்போது இங்கு வசித்து வரும் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் அளிக்க போவதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும் 36 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு கொண்டு வருமாறும் கடந்த மாதம் குடிசை மாற்று வாரியத்தினர் அறிவித்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்களான நாங்கள் தினக் கூலியாக ரூ.200 சம்பாதித்து வருகிறோம். இதில், குடிசை மாற்று வாரியத்தில் வீடு பெற 36 ஆயிரம் ரூபாய் நியாயமற்றது. மேலும், இந்த தொகையினை வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்கின்றனர் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள். இதற்கு நிரந்தர தீர்வினை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி தங்களுக்கான வாழ்விடத்தை அமைத்து தர வேண்டும் என்கின்றனர் சி.எம்.சி பகுதி மக்கள்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...