சோமனூர் பேருந்து நிலைய விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் அறிவிப்பு

கோவை மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று மேற்கூரை இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த கிட்டாம்பளையம் பகுதியைச் சேர்ந்த துளசிமணி (50), தனியார் கல்லூரியில் பயிலும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தாரணி (21), காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40), அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் (43) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...