மியான்மரில் முஸ்லீம் இனப்படுகொலையை கண்டித்து கோவை வடக்கு தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மியான்மரில் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லீம் இனப்படுகொலையை கண்டித்து கோவை வடக்கு தமுமுகவினர் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை வடக்கு மாவட்ட தமுமுக பொருளாளர் காதர் உசேன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது கலந்து கொண்டு மியான்மர் அரசிக்கெதிராகவும், புத்த பயங்கரவாதிகள் மற்றும் இராணுவத்திற்கெதிராகவும் கண்டன உரையாற்றினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மியான்மர் (பர்மா) நாட்டில் ரோஹிங்கிய பகுதியில் கி.பி 1784ம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் முஸ்லீம்களை பாசிச வெறியர்கள் கொலை செய்வதும், அவர்களின் வீட்டுகளை தீவைத்து எரித்தும் கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதனை அந்நாட்டு அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்து வருகிறது. அதேபோல உலக நாடுகளும் இனப்படுகொலை குறித்து மெளனம் காத்து வருகிறது.

சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேசனலின் தென் கிழக்கு ஆசிய இயக்குநர் ரபின்டி ஜாமீன் தனது அறிக்கையில் திட்டமிட்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறிவைத்து  தாக்கப்பட்டுதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஐ.நா சபையின் மனிதஉரிமை நிறுவனம், சர்வதேச மக்கள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் இந்த படுபாதக செயல்களை கண்டித்து வருகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆட்சியில் இதுபோன்ற இனப்படுகொலைகள் நடந்து வருவது வெட்கக்கேடாகும்.

மியான்மரில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்களை ஓரங்கட்ட ஆங் சாங் சூகி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். என்பதையே இதுபோன்ற இனப்படுகொலைகள் வெட்டவெளிச்சமாக காட்டுகின்றனர். மியான்மரில் முஸ்லீம்கள் மீது கட்டவீழ்ந்துவிடப்படும் அத்துமீறல்களையும், உயிர் வாழும் அடிப்படை உரிமையையும் பறிக்கும் பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும் இனியும் உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மியான்மர் அதிபரின் உருவ பொம்மையை தமுமுக வினர் தீயிட்டு எரித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக வின் கோவை மாவட்ட வடக்கு செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் காதர் உசேன், மமக மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, பொருளாளர் ஜபார் சாதிக்,  துணை செயலாளர்கள் சிங்கை சாகுல், சிராஜ்தீன், இப்ராஹிம், அப்துல் கரீம், பசீர், மைதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...