மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது

கோவை மாவட்டம் கேரம் சங்கம் மற்றும் கோவை வடக்கு அரிமா சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் 2016-17 -க்கான  போட்டிகள் நேரு மைதானத்தில் இன்று (09,09,2017) துவங்கியது. 



துவக்க விழாவில், கோவை மாவட்டம் கேரம் சங்கம் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்டம் கேரம் சங்கம் சேர்மன் யுவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரிமா சங்கம் 324-B5 மாவட்ட துணை ஆளுநர் வெங்கடசுப்ரமணியன் போட்டியை துவக்கி வைத்தார்.

3 நாட்கள் நடைபெறும் கேரம் போட்டியில் சீனியர் மற்றும் ஜுனியர்களுக்கான தனி மற்றும் இருவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றவுள்ளது. இதில், கோவையைச் சேர்ந்த 36 கேரம் கிளப்பின் துணை சங்கம் சார்பில் தனிப் போட்டியில் 164 குழுவும், இருதரப்பினர் போட்டியில் 64 குழுவாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. 



அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயது மற்றும் 14 வயதோருக்கன கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில், 18 மற்றும் 14 வயதோருக்கான பிரிவில் மொத்தம் ஆண்கள் 48 பேரும், பெண்கள் 24 பேரும் விளையாடவுள்ளனர். 

நாளை மறுநாள் (11.09.2017) அன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு மொத்தம் பரிசுத் தொகையாக ரூ.25,000 மற்றும் கோப்பைகளும் வழங்கப்படவுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.4000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசுத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும்.

இதில், கோவை வடக்கு அரிமா சங்கம் தலைவர் மனோகரன், செயலாளர் கோபிநாத், பொருளாளர் வெள்ளிங்கிரி, அரிமா ஜான் பீட்டர், கோவை வடக்கு அரிமா சங்கம் உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்டம் கேரம் சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...