யானை தாக்கி ஈஷா மைய ஊழியர் பலி !

கோவை மாவட்டம், பூண்டி அருகே யானை தாக்கியதில் ஈஷா யோகா மையத்தின் ஊழியர் உயிரிழந்தார்.

கோவையில், ஜக்கி வாசுதேவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா மையம். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பல ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் இம்மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் இந்த பகுதியானது யானைகள் வழித்தடப் பாதையாகவும், நீண்ட காலத்திற்கு முன்பு நீரோட்டப் பாதையாகவும் இருந்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும், அவ்வப்போது யானை தாக்குதலால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. 

இந்நிலையில், ஈஷா யோகா மையத்தில் ஐடி சிஸ்டம் அட்மினாக பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் மனீஷ்குமார் (24) சனிக்கிழமையன்று யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈஷா மையத்தின் ஊழியர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில் இன்று சென்னையில் அம்மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் "நதிகளை மீட்போம்" பிரம்மான்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...