புதிய திட்டங்களை அமல்படுத்தி வரும் கோவை மாநகராட்சிக்கு "சிறந்த மாநகராட்சி"-க்கான விருது

இந்தியா முழுவதுமுள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி என்னும் பட்டத்தினை கோவை மாநகராட்சி சார்பில் தில்லியில் நடைபெற்ற 49 ஸ்காச் விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பெற்றார்.

கோவை மாநகராட்சியின் "ஸ்மார்ட் ட்ரீ" என்னும் திட்டத்தினை பாராட்டும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ட்ரீ குறித்தாக விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடுவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஸ்மார்ட் ட்ரீ திட்டமானது புதுவிதமான திட்டம் என்றும், இதுபோன்ற திட்டங்களை இன்னும் வேறு மாநிலங்களில் செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், கோவை மாநகராட்சியின் இந்த திட்டமானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பின்பற்ற வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சி மற்றும் புனே மாநகராட்சிக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...