புதிதாக திறக்கப்படும் மதுபானக் கடையை தடுக்கக் கோரி பொதுமக்கள் மனு

கோவை மாநகராட்சிக்கட்பட்ட குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட காவல் ஆணையாளரிடம், பொதுமக்கள் சார்பில் கோவை மாநகர் தெற்கு தி.மு.க. மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " புதிதாக மதுபானக் கடை அமைக்கப்பட உள்ள குறிச்சி கிராமம், ஈச்சனாரி கோவில் எதிரில் செட்டிபாளையம் சாலையில் பள்ளிக் கூடம் உள்ளது. முக்கிய வழிபாட்டு தலமான ஈச்சனாரி விநாயகர் மற்றும் சாய்பாபா கோவில்களும் அமைந்துள்ளன. மேலும், போத்தனூரில் நடக்கும் மேம்பால பணிகளால், தற்போது இந்த சாலையில் போக்குரவத்து அதிகம் ஏற்பட்டுள்ளது. 



எனவே, செட்டிபாளையம் சாலையில் மதுபானக் கடை அமைந்துவிட்டால், குடிமகன்களின் அட்டகாசத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும். மேலும், மதுபானக் கடை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலைமை ஏற்படும். 

ஆகவே, மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய மதுபானக் கடைகள் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...