நீட் தேர்வு அடிப்படையில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு மருத்துவ இடம் - கல்விக் கடன் கோரி ஆட்சியரிடம் மனு

நீட் தேர்வின் மூலம் பல் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள அருந்ததிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு, கல்விக் கடன் பெற்று தர அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியை சேர்ந்த கவுசல்யா, என்பவரது மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு, அப்பகுதியில் உள்ள தம்பு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்ருதி, நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். 

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவி ஸ்ருத்திக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் தாலம்பூர், ஸ்ரீ வெங்கஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால், கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தந்தை ஆதரவு இல்லாமல், தாயார் கூலி வேலைக்கு சென்று இதுவரை படித்து வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தி பல் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். எனவே  கல்வி கடன் பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என மாணவி ஸ்ருதி வேண்டுகோள் விடுத்தார்

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...