சைமா தலைவராக கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் தேர்வு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 58-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஓட்டல் லீமெரிடியனில் நடைபெற்றது. 

பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2017-18-ம் வருடத்திற்கு சைமாவின் தலைவராக கோவை, கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர், சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் முதன்மை அறங்காவலராக உள்ளார்.

மேலும் நடராஜன் அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சைமாவின் துணைத் தலைவர்களாக அவினாசி, எஸ்.சி.ம் டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னர்ஸ் மற்றும் தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குநர் கே.விநாயகம் மற்றும் பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...