சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு


தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால், ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க., செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-  ஆட்சியை கவிழ்ப்பேன் என்ற தினகரன் பேட்டிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. திமுகவுக்கும் எங்களுக்கும் போட்டி எனக்கூறி தினகரன் விளம்பரம் தேடப்பார்க்கிறார்.  தினகரனுக்கு விளம்பரம் தேடித்தர நான் தயாராக இல்லை.

பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். 

ஜனநாயக அடிப்படையில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். முதலமைச்சர், பெரும்பான்மை இருப்பதாக கருதினால், தைரியம் இருந்தால் சட்டசபையை கூட்டட்டும். கொல்லைபுறமாக திமுக ஆட்சிக்கு வராது.

சட்டசபையை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டசபை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்த நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெரும்பான்மை நிரூபித்த பிறகு முதலமைச்சர் என்னை பற்றி பேசட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...